திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளர் நியமனத்தில் சர்ச்சை: ஒன்றிய அமைச்சர் பெயரில் மோசடி

திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளராக ரவிபிரசாத் நியமனத்தில் சர்ச்சை கிளம்பியது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுவில் முதல் முறையாக 24 உறுப்பினர்கள், 4 அதிகாரிகள் தலைமையிலான நிர்வாக குழு உறுப்பினர்கள்,  50 சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 81 பேரை அம்மாநில அரசு சமீபத்தில் நியமித்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்ட தொழிலதிபர் ரவி பிரசாத், ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் பரிந்துரை பேரில் நியமிக்கப்பட்டதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளத என்று சர்ச்சை கிளம்பியது.

முதல்வர் ஜெகன் மோகனுக்கு நேற்று முன்தினம் கிஷன் ரெட்டி கடிதமும் எழுதினார். அதில், ‘ஒன்றிய  சுற்றுலாத்துறை அமைச்சராக, தனிப்பட்ட முறையில் நான் அறங்காவலர்  குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக நியமிக்க யாருக்கும் சிபாரிசு செய்யவில்ைல. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’  என்று கூறியுள்ளார்.  இதனால், கிஷன் ரெட்டியின் லெட்டர் பேடை ஆந்திர மாநில பாஜ.வினர் பெற்று, அதில் முறைகேடாக ரவி பிரசாத் பரிந்துரை செய்து நியமிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சந்திரபாபு நாயுடுலஞ்ச குற்றச்சாட்டு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல கோடி ரூபாய் கமாற்றப்பட்டு சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மிகப்பெரிய அறங்காவலர் குழுவை ஒட்டு மொத்தமாக கலைத்து விட்டு, பக்தர்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களை நியமிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: