மின்னல் தாக்கி ரூ.20 லட்சம் கருகியது

திருமலை: ஆந்திராவில் மின்னல் தாக்கி குடிசை வீடு எரிந்ததில் நிலத்தை விற்று வைத்திருந்த ரூ.20 லட்சம் கருகியது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், சிந்தலப்பூடி மண்டலம், குருபடா கூடத்தை சேர்ந்தவர் கல்லா கிருஷ்ணவேணி. இவரது மகன் மகேஷ். இருவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ேநற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கி கிருஷ்ணவேணியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது.

அவரும், மகேஷும் வீட்டை விட்டு வெளியில் வந்து தப்பினர். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரும் வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென குடிசை முழுவதும் பரவி முற்றிலும் எரிந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.20 லட்சம் பணம், 5 சவரன் தங்க நகைகள் எரிந்து நாசமானது.

Related Stories:

>