ரப்பர் குண்டால் டிரோன்களை சுட உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சில மாதங்களுக்கு முன் விமானப்படை தளம் மீது டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, டிரோன்களின் நடமாட்டத்தை பாதுகாப்பு படைகள் தீவிரமாக கண்காணிக்கின்றன. சந்தேகத்துக்குரிய டிரோன்கள் துப்பாக்கி மூலம் மட்டுமே சுட்டு வீழ்த்தப்படுகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குறைந்த உயரத்தில் பறந்து வரும் சந்தேகத்துக்குரிய டிரோன்களை ‘பம்ப் ஆக்‌ஷன்’ என்ற தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கிகளில் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தும்படி, பாதுகாப்பு படைகளுக்கு நேற்று முதல் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>