சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ேநரில் ஆய்வு

சென்னை: சைதாப்பேட்டை,ஈக்காட்டுதாங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கம்நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின், சைதாப்பேட்டை,் ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி துணை ஆணையர்  விஷு மகாஜன் உடனிருந்தார்.

Related Stories:

>