மக்களை தேடி மருத்துவம் 5.60 லட்சம் பொதுமக்கள் பயன்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மக்களை தேடி  மருத்துவம் திட்டம் மூலம், நேற்று முன்தினம் வரை 5,60,190 பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்  என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மக்களை தேடி  மருத்துவம் திட்டத்தின் முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1172  அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3  மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில்   தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று முன்தினம் வரை உயர்  இரத்த அழுத்த நோய் உள்ள 2,45,877 பேர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ள  1,63,960 பேருக்கும், உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ள 1,13,093 பேர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் 17,908 பேர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 19,296 பேருக்கு இயன்முறை  சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதை தவிர்த்து 56 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய  டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது.  இத்திட்டத்தினால் நேற்று முன்தினம் வரை மொத்தம் 5,60,190 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: