உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைகளுக்கு 60 சின்னங்கள் ரெடி

ேவலூர்: தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி ேதர்தலில் சுயேச்சையாக ேபாட்டியிடும் வேட்பாளர்களுக்கு 60 சின்னங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ெசங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வரும் அக்.6 மற்றும் 9ம்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம்தேதி தொடங்கியது.

வரும் 25ம்தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். மொத்தம் 27 ஆயிரம் பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்ைக அக்டோபர் 12ம்தேதி நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர, சுயேச்சையாக ேபாட்டியிடும் வேட்பாளர்களுக்கு 60 சின்னங்களை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது.

அதன்படி மை எழுதுகோல், சாய்வு மேஜை, கைக்கடிகாரம், மைக்கூடு, குளிர்பதனி, பேருந்து, இரட்டை நாதஸ்வரம், கை பம்பு, தண்ணீர்குழாய், கைப்பை, தீப்பெட்டி, ஊஞ்சல், திருகுஆணி, முள்கரண்டி, மேசை விளக்கு, புட்டி, விளக்கு கம்பம், ஹெலிகாப்டர், தையல் இயந்திரம், லாரி, ஜன்னல், கரும்பலகை, கேன், சிலேட், பூட்டு மற்றும் சாவி, ஆட்டோ ரிக்‌ஷா, மூக்குக்கண்ணாடி, கத்தரிக்காய், விமானம், கிணறு, தேங்காய் மூடிகள், மண்வெட்டி, மின்விளக்கு, மேசை, செல்போன், திராட்சை கொத்து, வாழைப்பழம், மின்விசிறி, சூரியகாந்திப்பூ, ஏணி, சாக்லெட், குடிசை உள்ளிட்ட 60 சின்னங்கள் தேர்தல் ஆணையம் தயார் செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் இறுதி செய்யப்பட்ட பின்னர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>