சாலையோர கோயிலுக்குள் கார் புகுந்தது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததில் நிலைதடுமாறி, சாலையோர கோயிலுக்குள் கார் புகுந்தது. இதில் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் 2 பைக்குகள் சேதமாகின. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருவள்ளூரை சேர்ந்த பாலசந்தர் இன்று காலை கரையான்சாவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி டிரங்க் சாலையில் கார் சென்றபோது, அதன் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்றிருந்த பைக்கை இடித்து தள்ளியபடி, அங்குள்ள சாலையோர கோயிலுக்குள் கார் மோதி நின்றது.

இவ்விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. கோயிலுக்குள் படுத்திருந்த ராஜேஷ் என்பவருக்கு காலில் அடிபட்டு அலறி சத்தம் போட்டுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டிவந்த டிரைவர் பாலகுமார் லேசான காயங்களுடன் உயிர் ப்பினார். இச்சம்பவத்தின் போது, குடியிருப்புகள் கட்ட வாடகைக்கு விடப்படும் ஏணி வைத்துள்ள கடை, மற்றொரு பைக் மற்றும் சாலையோர கோயில் முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் விபத்துக்கு உள்ளான காரை அகற்றினர். இந்த கார் சற்று வேகமாக இயக்கியிருந்தால், அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என குறிப்பிடத்தக்கது.

Related Stories: