நியூசிலாந்து செய்த துரோகத்தை வேறு யாரும் செய்ய முடியாது: இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை நியூசிலாந்து கடைசி நேரத்தில் ரத்து செய்ததற்கு முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கண்டனம் தெரிவித்துள்ளது. யூ டியூப் சேனலில் அவர் கூறுகையில், ``நியூசிலாந்து செய்ததை, எந்த நாடும் இன்னொரு நாட்டிற்கு செய்ய முடியாது. நீங்கள் இங்கு வந்தீர்கள்; உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், எங்களிடம் சொல்ல வேண்டும். உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும், நீங்கள் எங்களுடன் பேச வேண்டும்.

நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருப்போம். பாகிஸ்தான் வரும் அணிகளுக்கு தலைவர்களுக்கு வழங்கப்படுவது போல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு என்ன அச்சுறுத்தல் இருந்தது என தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Related Stories:

>