பவுலர்களுக்கும் டோனி ஆலோசனை உதவும்: சேவாக்

உலக கோப்பை டி.20 தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை வரவேற்று மாஜி அதிரடி வீரர் சேவாக் கூறியதாவது: டி 20 உலகக் கோப்பைக்கான குழு வழிகாட்டியாக இருக்கும் வாய்ப்பை டோனி ஏற்றுக்கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நீரோட்டத்தில் எம்எஸ் மீண்டும் வர வேண்டும் என்று பலர் விரும்புவதை நான் அறிவேன். வழிகாட்டியாக இருப்பது சிறந்த விஷயம். பேட்டிங்கிற்கு மட்டுமின்றி பந்துவீச்சாளர்களுக்கும் அவரின் ஆலோசனை உதவும், என்றார்.

Related Stories:

>