மாஜி அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்ற அதிமுக தொழிற்சங்க தேர்தலில் நிர்வாகிகள் பயங்கர மோதல்: பணம் கொடுத்து பதவி பெற்றதாக கோஷம்

மதுரை:    மதுரை, பைபாஸ் ரோடு பகுதியில் மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் உள்ளது. இப்பகுதியில்  அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மதுரை செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கு கிளை செயலாளராக ஏற்கனவே இருந்த முருகனை மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சங்க அலுவலகத்திலேயே முன்னாள் அமைச்சர்  உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் கோஷம் எழுப்பினர். பணத்தை பெற்றுக் கொண்டு பதவி வழங்கியதாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் ஆகியோர் சமரசம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை பைபாஸ் சாலையில் பதற்றமான சூழல் உருவானது. திடீரென ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே களேபரம் ஆனது. பின்னர் நிர்வாகிகள், இருதரப்பினரையும் சமரசம் செய்து அப்புறப்படுத்தினர்.

Related Stories:

>