உள்ளாட்சி தேர்தல் எதிரொலி அமமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் பல்வேறு பதவி இடங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினர் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களை பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட  செயலாளர் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>