இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை..!

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அனில் கும்ப்ளே-க்கு அடுத்த வாய்ப்பாக வி.வி.எஸ். லட்சுமண் பெயரும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கும்ப்ளேயும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு லட்சமணும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள். இருவரையும் பிசிசிஐ தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2016-17ம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக அனில் கும்ப்ளே இருந்தார். அப்போது கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார். விராட் கோலியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப் பின் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையுடன் ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால்  தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லட்சுமண் இருவரில் யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பிக்க கோரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: