செஞ்சி அருகே பொன்னாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக புகார்: விழுப்புரம் ஆட்சியர் நேரில் விசாரணை

செஞ்சி: செஞ்சி அருகே பொன்னாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது பற்றி விழுப்புரம் ஆட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பொன்னாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்தது. பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ஆட்சியர் மோகன் விசாரணை நடத்தினார். உள்ளாட்சி அமைப்பு பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>