விருதுநகரில் மாஸ்க் இல்லாமல் வந்தால் கொரோனா டெஸ்ட் கட்டாயம்

* போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறை அதிரடி

விருதுநகர் : விருதுநகரில் முகக்கவசம் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் வரை 45,868 பேர் பாதிக்கப்பட்டு, 45,236 பேர் குணமடைந்துள்ளனர். 546 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் புதிதாக 12 பேர் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

தொற்று பரவல் ஒற்றை இலகத்தில் இருந்து இரட்டை இலக்கதிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மார்க்கெட், கடைவீதிகள், தெருக்கள், பஸ்களில் பயணிக்கும் மக்களில் 70 சதவீதம் பேர் மாஸ்க் அணியாதது தான். மாஸ்க் அணியும் 30 சதவீதம் பேரில் 20 சதவீதம் பேர் சரியாக அணிவதில்லை.

கொரோனா தொற்று பெரிய அளவில் இல்லாத நிலையில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்க வருவோரின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளதால் விருதுநகரில் மாஸ்க் அணியாமல் கடைவீதிகள், பஜார், பஸ் நிலையங்களுக்கு வந்து செல்வோரிடம் கொரோனா பரிசோதனை மாதிரிகளை போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறை அலுவலர்கள் எடுத்து வருகின்றனர்.

Related Stories: