அம்பத்தூரில் சிறைக்காவலர் எனக் கூறி பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி...கணவரிடம் இருந்து மணமுறிவு பெற்று தருவதாக கூறி பொறியாளர் கைவரிசை

அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் அருகே சிறைக்காவலர் எனக் கூறி பெண்ணிடம் ரூ.13 லட்சம் பணத்தை ஏமாற்றிய பொறியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சூரப்பட்டையை சேர்ந்த லட்சுமிபிரியா பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை பிரிந்து 8 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். தன்னுடன் ஒரே கல்லூரியில் படித்த மதன்குமார் என்பவருடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. புழல் சிறையில், சிறைக்காவலராக பணியாற்றி வருவதாக மதன்குமார் கூறவும் கணவரை பிரிய உதவி கேட்டுள்ளார் லட்சுமிபிரியா.

பிரபல வழக்கறிஞர் எனக்கு தெரிவும் என கூறி, சிறிது சிறிதாக லட்சுமிபிரியா-விடம் இருந்து ரூ.13 லட்சம் வரை பணத்தை வாங்கினார் என்பது புகார். விவகாரத்துக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சந்தேகம் அடைந்து கேட்ட போது லட்சுமிபிரியா அவர் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மதன்குமார் மீது அம்பத்தூர் காவல்நிலையத்தில் லட்சுமிபிரியா புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் மதன்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்த போது கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும், போலி அடையாள அட்டையை வைத்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.

Related Stories:

>