வேலூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறு!: மேளதாளங்களுடன் சென்று பெண் வேட்பாளர் மனுதாக்கல்..!!

வேலூர்: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், நேற்று வரை 13,542 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் செம்பராயநல்லூ உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜீவிதா ரமேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது காட்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மேளதாளங்கள் முழங்க கிராம மக்களின் ஆதரவோடு ஊர்வலமாக சென்று அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம் தலைவர் பதவிக்கு 48 பேரும், சித்தான்கூர் தலைவர் பதவிக்கு 33 பேரும் மனு செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 23 பேர் இதுவரை  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் ஆகிய ஒன்றியங்களில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுகவினரிடம் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.

Related Stories: