ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 8 சோதனைச்சாவடிகள்: எஸ்பி தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம், ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு சம்பந்தமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சுமார் 1,165 காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்  பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 4 பறக்கும் படைகளும், 16 ரோந்து வாகனங்களும், 21 பைக் ரோந்து வாகனங்களும், மாவட்ட எல்லை பகுதிகளில் 8 சோதனைச்சாவடிகளும் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த  13ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தேர்தலில் எவ்வித அச்சமின்றி நியாயமான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்யவும், தேர்தல் விதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட காவல் அலுவலகத்தில் (24X7) முழு நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. தேர்தல் விதிமீறல்கள் இருந்தால், அவசர உதவிக்கு 100 மற்றும் 72001-02104 ஆகிய எண்களில் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>