வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற சிறுமி ஒப்படைப்பு

செங்கல்பட்டு: தமிழக அரசு ஆதரவற்ற  குழந்தைகளை பாதுகாக்க, பல்வேறு வகைகளில் செயல்பட்டு, அவர்களது பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் எதிர்கால நலனை சமூதாயத்தில் மேம்படுத்துகிறது. அதில், அரசின் வளர்ப்பு பராமரிப்பு திட்டம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அலுவலகம் செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்படுகிறது. இதில்  அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி பயின்று வந்த 11 வயது சிறுமி, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தம்பதியிடம்  வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ்,  மாநில அரசு தத்து வளர்ப்பு  மையத்தில் பதிந்து, பதிவு மூப்பு அடிப்படையிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தின் முறையான நடைமுறைகளை கடைபிடித்து, ஒப்படைக்கப்பட்டார்.

குழும தலைவர் ராமச்சந்திரன்  தலைமையில், சிறுமி குறித்து வளர்ப்பை உறுதி செய்யும் வண்ணம், வளர்ப்பு, பராமரிப்பு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. அப்போது, குழும உறுப்பினர்கள் நிர்மலா,  சக்திவேல்,  தாமோதரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலக பணியாளர்கள்  சம்பத்குமார்,  நந்தினி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>