போலீஸ் என கூறி முதியவரிடம் வழிப்பறி: மர்மநபருக்கு வலை

சென்னை: மதுராந்தகத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (62). நேற்று முன்தினம் மாரிமுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனது மகன் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்றார். அங்கு பேர குழந்தைகளை பார்த்துவிட்டு, மாலை மதுராந்தகம் புறப்பட்டார். இதையொட்டி, கோயம்பேடு பஸ் நிலையம் செனற் அவர், தனது கைப்பையில் ரூ.4 ஆயிரம், செல்போன், மகன் வீட்டில் அளித்த 15 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை வைத்திருந்தார். அப்போது, அஙகு வந்த மர்மநபர் மாரிமுத்துவிடம்,  தன்னை போலீஸ் என கூறி  ரேஷன் அரிசியை கடத்துகிறாயா, வா காவல் நிலையத்துக்கு போகலாம் என மிரட்டியுள்ளார்.

அதற்கு, அரிசியை என் மகன் வீட்டில் இருந்து வாங்கி வருகிறேன் என மாரிமுத்து கூறியுள்ளார். ஆனால் மர்மநபர், அவரது சட்டையை பிடித்து இழுத்து சென்றார். இதனால் பயந்துபோன மாரிமுத்து, அலறி கூச்சலிட்டார். உடனே மர்மநபர், மாரிமுத்துவை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த 15 கிலோ ரேஷன் அரிசி, செல்போன், ரூ.4 ஆயிரத்தை பறித்து கொண்டு அவரை விரட்டியுள்ளார். இதுகுறித்து மாரிமுத்து, கோயம்பேடு போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: