நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே காக்கவாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த தண்டலம், காக்கவாக்கம், தொளவேடு,  தும்பாக்கம், ஆத்துப்பாக்கம் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விதைக்கும் நெல் மூட்டைகளை இங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று திடீரென நெல் கொள்முதல் நிலையத்தை மூடி விட்டனர்.

இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நெல் கொள்முதல் நிலையத்தை மூடிய அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  மூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ங்நது, அவர்கள் கொண்டு வந்த நெற்களை, நெல் கொள்முதல் நிலையம் அருகில் நெல்களை காய வைத்தனர்.

Related Stories:

>