காய்கறி தோட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி குழந்தைகள், பெண்களுக்கான சத்து காய்கறிகள், உணவு தானியங்களில் உள்ளது: எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு ஊட்டச்சத்து, காய்கறி தோட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் விழா நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான பெ.சாந்தி தலைமை வகித்தார் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காய்கறி தோட்டம் அமைப்பதற்கான பல்வேறு விதைகள் அடங்கிய பைகள் மற்றும் 1000 மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது.

பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் மூலம் ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைகள், பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து காய்கறிகள் மற்றும் சிறுதாணியங்களில் அதிகளவில் உள்ளது. சிறுதானியம் மற்றும் காய்கறிகளை உணவாக உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் தடுக்கப்படுகிறது, என்றார்.தொடர்ந்து வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கினார்.

இதில் காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றி தோட்டக்கலை உதவி பேராசிரியர்கள் புனிதா, விஜயசாந்தி, (பூச்சியியல்) சிவகாமி, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் த.எத்திராஜ், ஒன்றிய கவுன்சிலர் திலீப்ராஜ், நிர்வாகிகள் என்.டி.சுகுமாரன், கே.ஏ.அபினாஷ், ரவி, அன்பு, வளர்மதி, சுந்தர், வினோத்குமார், சிபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: