‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிபூண்டி அருகே மக்களை தேடி மருத்துவ முகாமை எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அடுத்த கிழ்முதலம்பேடு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் நேற்று தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம், அனைத்து கிராமத்திலும் மாதாந்திர பிபி, சர்க்கரை மாத்திரை வாங்குபவர்கள், பொது தொலைபேசி 104 எண்ணில் தொடர்பு கொண்டால் நேரடியாக செவிலியர்கள் சென்று சிகிச்சை அளிப்பார்கள். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வயதானவர்கள் உள்பட பல்வேறு மருத்துவம் பார்க்க விரும்பும் பொதுமக்களை கண்டறிந்து முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார். இதில், வட்டாட்சியர் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், கிழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: