மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு விவகாரம் மாஜி அமைச்சர் செல்லூர்ராஜூ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எச்சரிக்கை

மதுரை:  மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘ஸ்மார்ட் சிட்டி  பணிகளில் முறைகேடு நடைபெற்று இருந்தால் நிரூபிக்கலாம்’’ என முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவரின் விஞ்ஞான திறமையை உலகமே  அறியும். அறிவு இருப்பவர்கள் இப்படி சவால் விட மாட்டார்கள்.

 முறைகேடுகள் நடைபெற்று இருப்பதை கண்டறிவது வித்தை அல்ல. ஏற்கனவே பல  முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. எனவே  செல்லூர் ராஜூ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் செய்த தவறால், இழந்த  பணத்தை கூட எடுத்து விடலாம். தவறான திட்டத்தை செயல்படுத்தினால் அது அதை  விட 10 மடங்கு நஷ்டத்தைத் தந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

நோண்டி நோண்டி கேள்வி கேக்காதீங்க... செல்லூர் ராஜூ டென்சன்

மதுரையில், முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் ஸ்மார்ட்  சிட்டி திட்ட கேள்விகளை தொடர்ச்சியாக நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:  தொடர்ந்து என்னிடம் ஸ்மார்ட்சிட்டி குறித்த திட்டங்களை நோண்டி நோண்டி  கேள்விகள் கேட்க வேண்டாம்.  ஸ்மார்ட் சிட்டி என் துறை அல்ல. மதுரையின்  அமைச்சர் என்ற முறையில் அதனை ஆய்வு செய்தேன். அந்தப்பணிகளை செய்தது யார் என  எனக்கு தெரியாது என்று பதற்றத்துடன் கூறினார்.

Related Stories: