யூடியூப்பில் மாதத்துக்கு ரூ.4 லட்சம் வருமானம்: ஒன்றிய அமைச்சர் கட்கரி பெருமை

பரூச்: கொரோனா தொற்றின் போது யூடியூப்பில் தான் நிகழ்த்திய உரைகள் பிரபலமானதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் இருந்து மாதம் ரூ.4 லட்சத்தை ராயல்டியாக பெறுவதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். குஜராத் மாநிலம், பரூச்சில் 423 கி.மீ. டெல்லி-மும்பை விரைவுச்சாலை திட்டம் ரூ.35,100 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நேற்று ஆய்வு செய்த ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கொரோனா தொற்றின் போது, நான் ஒரு தலைமை சமையல் கலைஞராக மாறி, வீட்டில் சமைத்தேன். வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரை நிகழ்த்தினேன். இவ்வாறாக வெளிநாட்டு பல்கலைக் கழக மாணவர்களுக்கு உள்பட 950 விரிவுரை ஆற்றி உள்ளேன். அவற்றை யூடியூப்பில் பதிவேற்றம் செய்தேன். அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால், யூடியூப் நிர்வாகம் எனக்கு மாதத்துக்கு ரூ.4 லட்சம் ராயல்டி வழங்குகிறது,’’ என்றார் பெருமையுடன்.

Related Stories:

>