நாடு முழுவதும் 27ம் தேதி பந்த்; எதையும் செயல்பட விட மாட்டோம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் 3 சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி எல்லையில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், நாடு முழுவதையும் சேர்ந்த 40 விவசாய சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் கீழ் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சம்யுக்த் மோர்ச்சா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும். ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை செயல்பட அனுமதிப்படாது. தனியார், அரசு வாகன போக்குவரத்துகள் நிறுத்தப்படும். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த பந்த் நடத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>