தனியார் நிறுவன பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல்நிலைய பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: காவல் நிலையங்களில் தனியார் நிறுவன பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை உடனே அகற்றி, புதிய பெயர் பலகை வைக்க  வேண்டும் என்று அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் பலர் தாமாக முன்வந்து டிஜிட்டல் முறையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் பெயர் பலகைகள் வைத்துள்ளனர். அப்படி வைத்துள்ள பெயர் பலகையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் பெயருடன் நன்கொடை வழங்கிய தனியார் நிறுவனத்தின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுக்கு சமூக ஆர்லவர்கள் பலர் தனியார் விளம்பர பெயர்களுடனான பெயர் பலகையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைதொடர்ந்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு கமிஷனர்கள், ஐஜிக்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது. எனவே, தனியார் நிறுவன பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர் பலகைகளை உடனே அகற்றி அதற்கு பதில் புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும். காவல் நிலையங்களில் புதிய பெயர் பலகை வைக்க அந்தந்த காவல் நிலைய முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம். அதற்கான பணிகளில் உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>