×

சொத்து வரி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி பாக்கியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 5வது மண்டலத்துக்கு உட்பட்ட சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளின் உரிமையாளர்கள் பல ஆண்டாக சொத்து வரி செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. வருவாய்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் வரி செலுத்தவில்லை. இதையடுத்து மண்டல அதிகாரி உத்தரவின்பேரில், உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை மேற்கண்ட வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.Tags : Non-payment of property tax Sealed for 5 stores
× RELATED ஒரே நாளில் 5 கடைகளில் கொள்ளை: தாம்பரம் அருகே துணிகரம்