பூந்தமல்லி, பொன்னேரி பகுதிகளில் 6 மாணவர்களுக்கு கொரோனா

பூந்தமல்லி: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளியும், கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள், திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேபோல், பொன்னேரியில் ஒரு பள்ளி மாணவன், 2 கல்லூரி மாணவர்களுககு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories:

>