உரிய அனுமதியின்றி இயங்கிய சூப்பர் மார்க்கெட், விடுதிக்கு சீல்

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், கேம்ப் ரோடு அருகே, டேனியல்ஸ் சில்வர் ஓக் என்ற தனியார் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. மொத்தம் 9 தளங்கள் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடத்தில், அனைத்து தளங்களிலும் குடியிருப்புகள் கட்டுவதாக அதன் உரிமையாளர் சிஎம்டிஏவில் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அதை மீறி கட்டிடத்தின் தரைதளத்தில் சூப்பர் மார்க்கெட், 2, 5, 8 மற்றும் 9வது தளங்களில் தங்கும் விடுதி ஆகியவை இயங்கி வந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், சிஎம்டிஏ துணை திட்ட அலுவலர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள், சேலையூர் போலீசார் பாதுகாப்புடன் நேற்று மேற்கண்ட கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதியின்றி சூப்பர் மார்க்கெட் மற்றும் தங்கும் விடுதி செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, அவற்றுக்கு சீல் வைத்தனர்.

Related Stories:

>