×

ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை..!

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி அக்.6, அக். 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மேலும், வரும் 22ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். வரும் 23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில்; மாநிலம் முழுவதும் அல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால், 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்த எந்தக் காரணமும் இல்லை எனவும், சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஓட்டுப் போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும்.

இந்த தேர்தலில் மத்திய அரசு ஊழியர்களை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். செப்.,14 ல் தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி அளித்த மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rural Inland Elections , AIADMK case against holding rural local body elections in 2 phases: ICC hearing soon ..!
× RELATED தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில்...