மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12-ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசின் அங்கீகார சீல் இல்லாததால் வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் என தகவல் வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டார். மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: