×

தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் மூல காரணமே பயங்கரவாதம் தான் ; பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழிக்க ஷாங்காய் கூட்டமைப்பு வழிவகை காண பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் மூல காரணமே பயங்கரவாதம் தான்.ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிகழ்வுகள், பயங்கரவாதம் தான் முக்கிய சவால் என்பதை நிரூபிப்பதாக உள்ளன. அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிகை குறைபாடு தொடர்பான பிரச்சனைகளே தெற்கு ஆசியாவின் பெரும் சவால்களாக உள்ளன.

சகிப்புத் தன்மையும் நிதானப்போக்கும் கொண்ட அமைப்புகள் அடங்கிய வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.தெற்கு ஆசியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது அவசியம்.இந்த வட்டார இளைஞர்களுக்கு எளிமையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் பயங்கரவாதத்தை முறியடித்தாக வேண்டும்.மத்திய ஆசிய நாடுகளுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது.தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. கருத்துப் பரிமாற்றம், வெளிப்படைத்தன்மை, பங்கேற்பு ஆகிய அம்சங்களை கொண்டதாக உறவுகள் அமைய வேண்டும், என்றார். மேலும் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் திறமை வாய்ந்த இளைஞர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிந்தனைகளை வளர்த்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, தஜிகிஸ்தான் நாட்டின் 30வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு அதிபருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.



Tags : South Asia ,Modi , பிரதமர் மோடி
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...