சிறுமிக்கு டார்ச்சர்: மதபோதகர் கைது

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (36). மதபோதகர். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் சாமுவேலை கண்டித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சாமுவேல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் மதபோதகர் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories:

>