எஸ்ஐ, ஏட்டு கைது

திருவனந்தபரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் போலீசார் கடந்த ஏப்ரல் 21ம் ேததி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மீன் வண்டியை சோதனையிட்டனர். அதிலிருந்த புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசா ரித்த நீதிபதி, புகையிலை பொருளை அழித்து விட உத்தரவிட்டார்.

ஆனால் போலீசார், புகையிலை பொருட்களை அழிக்காமல் ஒரு புரோக்கர் மூலம் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட கோட்டக்கல் எஸ்ஐ ரஜீந்திரன், ஏட்டு சஜி அலெக்சாண்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>