×

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆதார் கட்டாயமா?: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆதார் கட்டாயமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களிடம் ஆதார் எண் கேட்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண் கேட்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜானகி என்பவர் மனு தொடர்ந்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. ஆதார் எண் கேட்பதற்கு தடை விதிக்குமாறு பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


Tags : DNPSC ,Tamil Nadu government , DNPSC Examination, Ada, Government of Tamil Nadu, Icord Branch
× RELATED சிறை அலுவலர் பணிக்கு வரும் 27ல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு