பொன்னேரியில் சிறுமியின் திருமணம் நிறுத்தம்

பொன்னேரி: பொன்னேரி அருகே பெரும்பேடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் அஜித் (24). இவருக்கும் மைனர் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மகிதா அன்னை கிறிஸ்டி மற்றும் போலீசார் சென்று திருமணம் நடைபெறவிருந்த மணமகளின் வயது குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், திருமண வயதை எட்டாத மைனர் பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருதரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேசி, சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

Related Stories:

>