×

திருவண்ணாமலையில் போலீஸ் வேனும், காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் பலி, 12 பேர் காயம்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீஸ் வேனும் காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்ததோடு 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் காவல்துறை வேனும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் போது அழகு சென்னை என்ற கிராமப்பகுதியில் இன்று காலை காரும், காவல்துறை வேனும் நேருக்கு நேர் மோதியது. காரில் பயணித்த பெண் உயிரிழந்த நிலையில் காவல்துறை வேனும் தலைக்குப்புற கவிழ்ந்தது. பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் 12 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையை சேர்ந்த 2 பெண்களுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 7 நபர்களுக்கு லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai, accident
× RELATED சுங்கச்சாவடியை உடைத்த வழக்கு;...