வேலூர் மாநகராட்சி 1 வது வார்டில் அதிமுக ஆட்சியில் கட்டிய தரமற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவு: பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் ஆபத்து

வேலூர்: வேலூர் மாநகராட்சி 1 வது வார்டில் அதிமுக ஆட்சியில் கட்டிய தரமற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ெதாட்டியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு வருதற்குள் இடிந்து விழும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  வேலூர் மாநகராட்சியில் கடந்த 2015ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 18 இடங்களில் ேமல்நிலை நீர்தேக்க ெதாட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கியது.  ஆமைவேகத்தில் நடந்து வந்த பணியால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி குரல் எழுந்தது. அதேசமயம் கட்டுமான பணிகளும் தரமற்ற நிலையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக புகார்கள் எழுந்துவந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுமான பணிகள் இந்தாண்டு தொடக்கத்தில் முடிந்தது.

18 இடங்களில் கட்டப்பட்டு வந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஒன்றாக, வேலூர் மாநகராட்சி 1வது வார்டு கல்புதூர் ராஜீவ்காந்தி நகரில் 12.50லட்சம் லிட்டர் ெகாள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பாதியளவு குடிநீர் நிரப்பிய நிலையில் திடீரென, தொட்டியின் பாதியளவில் கசிவு ஏற்பட்டு, சுவர் முழுவதும் ஈரமாகி குடிநீர் கசியத்தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி பணியாளர்கள் உடனே குடிநீர் நிரப்பும் பணியை நிறுத்தி, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே கசிவு ஏற்படுகிறதே, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உரைந்துகிடக்கின்றனர்.

எனவே அம்ரூத் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும். அதோடு கல்புதூர் ராஜீவ்காந்தி நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் கசிவு சரிசெய்வதோடு, தரமற்ற கட்டுமான பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததார்கள் மீதும், அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டிரான்ஸ்பார்மர் அருகே நீர்தேக்க தொட்டி

வேலூர் மாநகராட்சி கல்புதூர் ராஜீவ்காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகாமையிலேயே, மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்தால், டிரான்ஸ்பார்மர் மீது பட்டு, மின்சார விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை இடம்மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: