பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் ஏரியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னை:  பொன்னை அடுத்த கீரைச்சாத்து ஊராட்சியில் உள்ள ஏரியில் கோழி இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கீரைச்சாத்து ஊராட்சியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கோழி இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் இறைச்சிக்கழிவுகளை மூட்டை, மூட்டையாக ஏரியில் கொட்டிவருகின்றனர்.

இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதால் அருந்ததிபாளையம், கன்னிகாபுரம், பெல்லவாரி கண்டிகை உட்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும், ஏரியில் தொடர்ந்து இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரி நீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை குடிக்கும் கால்நடைகளுக்கு பாதிப்பும் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீரைச்சாத்து ஏரியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து, தண்ணீரை மாசுவடைதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>