ஆசியாவின் ஒற்றுமைக்கு இந்தியாவும் சீனாவும் முன்னுதாரணமாக திகழும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

டெல்லி : கிழக்கு லடாக்கில் பணிகளை திரும்பப் பெறுவது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21வது ஆண்டு கூட்டம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழு ஒன்றும் கலந்து கொள்கிறது. காணொலி முறையில் பங்கேற்கும் மோடி, மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரையும் நிகழ்த்துகிறார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பிரதிநிதியாக தஜிகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசினார். கிழக்கு லடாக் பகுதியில் படைகளை திரும்பப் பெற்று அமைதியை நிலை நாட்டுவது தொடர்பாக இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ஆசியாவின் ஒற்றுமைக்கு இந்தியாவும் சீனாவும் முன்னுதாரணமாக திகழும் என குறிப்பிட்டுள்ளார்.அதே போல தஜிகிஸ்தான்,ஈரான், அர்மேனியா, உஸ்பேகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் அவர் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories:

>