பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வந்தால் விலை குறைய வாய்ப்பு?: நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது

டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது. உத்திரபிரதேசம் லக்னோவில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இன்று கூட்டம் நடைபெறுகிறது.

இதனையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,  அத்யாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. மேலும், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வந்தால் அதன் விலை கணிசமாக குறையும். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் நிலை ஏற்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும், swiggy, zomato போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கொண்டு வந்தால், Online வாயிலாக நாம் வாங்கும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை உணவகங்களிடம் இருந்து பெற்று, அதை உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும். இதனால், தற்போதுள்ள விலை உயர வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: