ஐபிஎல் ரிட்டர்ன்ஸ்

* ‘நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் பாதியை விட எஞ்சிய ஆட்டங்களில் விளையாட இருப்பதால்,  கூடுதல் புத்துணர்ச்சியை உணருகிறேன்’ என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் லியம் லிவிங்ஸ்டோன் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கன், தலைமை பயிற்சியாளர் பிராண்டன் மெக்கலம் இருவரும், ‘எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்கள் ரசிகர்கள் முன்னிலையில் நடக்க இருப்பது உற்சாகத்தை தருகிறது’ என்று கூறியுள்ளனர்.

* ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆகியோர் விலகியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் வோக்ஸ் நேற்று, ‘‘ அடுத்து உலக  கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட வேண்டி இருப்பதால், தொடர்ந்து ‘பயோ பபுள்’ எனும் கண்காணிப்பு வளையத்தில் இருப்பது சிரமம் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

* இதுவரை நடந்த ஆட்டங்களுக்கான புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 7வது இடத்தில் இருக்கிறது. எப்படியாவது  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக சிக்சர் அடிக்க மட்டும் தனி பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.

* கரிபியன் லீக் டி20 தொடர் முடிந்ததையடுத்து, அதில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க வீரர்கள் இன்று அமீரகம் வந்து சேருகிறார்கள்.

Related Stories:

>