கைத்தறி, துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு துறைகளிலும் 4 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான நோடல் அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் பேரில்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரியாக  துணை இயக்குனர்கள் அனந்தகுமார், கணேசன் ஆகியோரை  நியமனம் செய்து ஆணையர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று ஒவ்வொரு அரசு துறை செயலாளர்கள் சார்பில் துறை வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: