இலவச மின்சார இணைப்பு அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:  விருதுநகர் அடங்கிய பகுதிக்கு காமராஜர் மாவட்டம் என்று பெயர் சூட்டும் நிகழ்ச்சி 1984ல் நடந்தது. முதல்வர் எம்ஜிஆர், நான் மற்றும் பலர் அதில் கலந்து கொண்டோம். இந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது, ‘விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வேண்டும்’ என்று கேட்டேன்.  நிறைவுரையாற்றிய முதல்வர் எம்ஜிஆர், ‘குமரி அனந்தன் கேட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை என்று கூறி,  இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வரானபோது, ‘முழு விவசாயத்துக்கும் இலவச மின்சாரம் தர வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் வேண்டுகோள் வைத்தேன். முதல்வர் கலைஞர், ‘எல்லா விவசாயத்துக்கும் இலவச மின்சாரம்’ என்று அறிவித்தார். இப்போது கலைஞரின் மகன் ஆட்சியில், ஏற்கனவே இலவச மின்சாரம் பெற்றுக் கொண்டிருப்பவர்களோடு மேலும் ஒரு லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்’ என்று அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories:

>