சீனாவில் பூகம்பம்: 3 பேர் பலி: 60 பேர் காயம்

பீஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயிரை பறித்துள்ளது. மேலும், 60 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு சிசுவான் மாகாணத்தில் நேற்று அதிகாலை 4.33 மணிக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த அதிர்வுகள் 10 கிமீ தூரம் வரை உணரப்பட்டது. இந்த பூகம்பத்தால் லுக்சியான் மாவட்ட பகுதியில் 3 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்துள்ளனர். 730 வீடுகள் இடிந்துள்ளன.

7,290 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.  சம்பவ இடத்தில் 890 தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர், மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பூகம்பத்தால் மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். கடும் மழையும் பெய்து வருவதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு, ரிக்டேர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பயங்கர பூகம்பம் தாக்கியதில் பல ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>