14 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், 14 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளன.மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த 1379 வாக்குச்சாவடிகளில் 14 அதிகரித்து 1393 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியல் மாவட்ட கலெக்டர்  அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகள் ஏதேனும் மாற்றங்கள் குறித்த கருத்துக்கள் ஆட்சேபணைகள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை வரும் 21ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.மேலும், கருத்துகள் ஏதும் வரப்பெறாத நிலையில் தற்போது வெளியடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலே இறுதியானதாக முடிவு செய்யப்படும்.  அதன் விவரம் வருமாறு.

Related Stories:

>