×

சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டில் அனைத்து சாதி மக்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப சமூகநீதி வழங்கும் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே நமது இலக்கு.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.

மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்ப்பவர்கள் ராணுவத்தினரின் நலன் கருதாதவர். இதுகுறித்து விமர்சிப்பவர்களின் தவறான எண்ணம் விரைவில் அம்பலமாகிவிடும்.
- பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் என்பது நாட்டின் சொத்துகளை அன்றாடம் விலைபேசி விற்கும் வியாபார கூட்டமாக மாறியிருப்பது வரலாற்று அவலம்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலைவாசியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி.

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...