சட்டசபை கூட்டத்தொடருக்கான ஓவியம் நடிகர் பொன்வண்ணனை பாராட்டிய முதல்வர்

சென்னை: நடிகர் மற்றும் இயக்குனரான பொண்வண்ணன், நடிகை சரண்யாவின் கணவர். இவர் அடிப்படையில் ஒரு ஓவியர். சட்டசபை நிகழ்வுகளை பாராட்டி அதற்கு ஒரு ஓவியம் வரைந்து வெளியிட்டிருந்தார் பொன்வண்ணன். அந்த ஓவியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்து அதில், ‘ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்பு, விவாதங்கள், மக்கள் நல அறிவிப்புகள் என நம்பிக்கையுடன் நிறைவடைந்த சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஓவியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது.

அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், பொன்வண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓவியத்துக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். ‘இந்த பாராட்டு என் மகிழ்வின் உச்சம்’ என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் பொன்வண்ணன்.

Related Stories:

>