‘செக்ஸ்’ படங்கள் தயாரித்து வெளியிட்ட நடிகை ஷில்பா கணவர் மீது 1,500 பக்க குற்றப்பத்திரிகை

சென்னை:  பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா, திரைப்பட துறையில் நிதி நெருக்கடியால் போராடிக் கொண்டிருக்கும் நடிகைகளை அடையாளங் கண்டு, அவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்தார். அதனை, ஆப்ஸ் மூலம் வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்த விகாரம் தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகளை மும்பை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் மும்பை போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ‘ராஜ் குந்த்ரா மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள், பெண்களை ஆபாசமான வழிகளில் படமாக்கி, அதன் மூலம் பாலியல் சுரண்டல் தொழிலை செய்துள்ளார். அவர்களிடம் இருந்து தொழில்நுட்ப பகுப்பாய்வு, சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள 1,500 பக்க துணை குற்றப்பத்திரிகையில், கூடுதல் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்றனர்.

Related Stories:

>