புரட்டாசி மாத பூஜை சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஸ்மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, களபாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும். 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அல்லது ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: